சூடான செய்திகள்

Wednesday 29 August 2012

கதை : துப்பறியும் புலிகள்


நாள் ஒன்று (1)
கதை எண்  ஒன்று  (1)
கதை : துப்பறியும் புலிகள் 
எழுதியவர் : சின்ன மாமா ..
பகுதி ஒன்று - புதன், 29 ஆகஸ்ட் 2012
                                                             பாகம் ஒன்று 

                           அன்று பயங்கர மழை  பிடித்து கொண்டது . கோகுலுக்கு வயது 10 அவனுடைய அண்ணனுக்கு 12  வயது இருவரும் ஒரே பள்ளியில்  படித்து வந்தனர் . ஆனால் அவன் அண்ணன் நிரஞ்சன் பள்ளிக்கு வரவில்லை ..நிரஞ்சனுக்கு அன்று உடம்பு சரியில்லை .
                          மணி 5 ஆகிவிட்டது வீட்டில் இருந்து யாரும் வரமாட்டார்கள் ஏனென்றால் பெற்றோர் இருவரும் வேலைக்கு  செல்கிறார்கள்.. அவனே நடந்து வீட்டுக்கு வரவேண்டும் ..வரும் வழியில் ஒரு பாழடைந்த பங்களா ஒன்று உள்ளது .. அதை தாண்டி தான்  வர வேண்டும் ..நேரம் ஆகிகொன்டே இருந்தது மழை வேகமாக பெய்ததால் சிறிதுநேரம் காத்திருந்தான் கோகுல்.
                          நேரம் 6 மணி மழை  விட்ட பாடில்லை எனவே சற்று குறைந்த உடன் கிளம்பினான் ..அவனுடன் யாரும் வர வில்லை.
அந்த பாழடைந்த பங்களா அருகில் வரும்போது மறுபடியும் மழை  இடியுடன்
வேகமாக பெய்ய துவங்கியது ..உடனே அவன் அந்த பங்களாவின் வாசலில் ஒதுங்கி கொண்டான் .நேரம் 7 மணி..அப்பொழுது ஒரு சிலர் பேசுவது மெதுவாக கேட்டது ..இங்கு யார் இருக்க முடியும் ... கதவில் பெரிய பூட்டு ரொம்ப வருடமாக தொங்கி கொண்டு தானே இருந்தது ???.

   மெதுவாக கதவினருகில் சென்று காது வைத்து கேட்டான் .ஒருவன் கூறினான் " என்ன தல இனிக்கி தான நம்ம பிளான் படி அண்த வீட்ல திருட போறோம் ..??
இன்னொருவன் " ஆமாண்டா மடையா !!
மற்றொருவன் : சரி இனிக்கு திருட போற வீட்ல காவலுக்கு ஆட்கள் இருபா ங்க .. நாம ரொம்ப கவனமா இருக்கனும்..
முதலாமவன்: நாம மூணு பேறும் சேர்ந்தா போவனும் ??. எனக்கு கொஞ்ச பயமா இருக்கு .. முன்ன பின்ன வேலைக்கு  போனதே இல்ல !!!
இன்னொருவன் :  நீ தான் சரியான சோம்பேறின்னு  எனக்கு தெரியும் ..ஆனாலும் உங்கிட்ட சில விஷயங்கள் இருக்கு .. உன்ன வச்சிதான் ஆடய போட போறோம்..

    கோகுல் அவர்கள் பேசுவது கேட்டு கொண்டிருந்தலும்  சரியாக எங்கே திருட போகிறார் கள் என்று புரியவே இல்லை அதை பற்றி எதாவது பேச மாட்டார்களா  என்று எதிர் பார்த்தான்..
                                                                      அதற்குள் அந்த வீட்டின் வெளியில் ஒரு கார் வந்து நின்றது கோகுல் அங்கு இருந்த ஒரு பெரிய மறைவிடத்தில் நின்று கொண்டு நைசாக எட்டி பார்த்தான். காரில் இருந்து இன்னும் இரண்டு பேர் நல்ல வாட்ட சாட்டமாக  இருந்தவர்கள் மெதுவாக அந்த பங்களா பின்புறமாக சென்றனர் ... இபொழுது 5 பேறும் சேர்ந்து மறுபடியும் தங்கள் பிளான் பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர்..

இதில் இருந்து கோகுல்கு  அவர்கள் திருட போகும் இடம் பற்றி தகவல் கிடைத்து விட்டது ...

அது ஒரு பூசாரியின் வீடு...

அந்த வீட்டில் உள்ள சரத் அவனுடன் தான் படிக்கிறான் ...
அனால் அவர்கள் பரம ஏழைகள் .. அவர்கள் வீட்டில் என்ன இருக்கும் திருட ???

யோசித்து கொண்டே  இருக்கும் போது  அந்த  ஐவரும் வெளியே வந்தனர் ,,
மறுபடியும் மறைந்து கொண்ட கோகுல்..

அவர்கள் கார் சென்று மறைந்ததும்
வேக வேகமாக வீட்டுக்கு திரும்பினான் ..
வீட்டில் அம்மா வெளியே பதட்டத்துடன் காத்திருந்தாள் ..
அவன் அப்பாவும் அவனை தேடி விட்டு வேகமாக வந்து விட்டார் ..
கோகுல் தான் அந்த பழைய பங்களாவில் தான் மழைக்காக  ஒதுங்கியதை கூறினான்..

அவனது பெற்றோருக்கு இபொழுது தன உயிரே வந்தது ..

இரவு உணவு சாபிடதும் உறங்குவதற்கு சென்றான்..
அண்ணனிடம் சொல்லலாமா வேண்டாமா என்று .. சிறிது நேரம் யோசித்தான் ..
பிறகு அவன் சகோதரனிடம் அணைத்து விஷயத்தையும் கூறினான் ...
அவன் அண்ணன் நிரஞ்சன் " சரி இத என் அப்பாகிட சொல்ல ல "
என்று கேட்டான்
கோகுல் " இத பெருசா எடுத்துக்க மடங்கன்னு தன சொல்லல என்றான்..
நிரஞ்சன் " நான் சரத் வீட்டுக்கு போய் அங்க
என்ன நடக்குதுன்னு பாத்துட்டு வரேன் என்றான்..
நானும் வரேன் என்ற கோகுலை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு .. உடனடியாக
நிரஞ்சன் கிளம்பினான் ...
மழை நன்றாகவே பெய்து கொண்டு இருந்ததால் மழை  கோட் அணிந்து கொண்டு சென்றான் ..

இடம் .. பூசாரி வீடு...

மெதுவாக வீட்டுக்கு பின்புறமாக சென்று வீட்டை நோட்டமிட்டான் காவலுக்கு 5 பேருக்கு மேல் இருந்தனர் அனால் அந்த வீடு ஒரு குடுசை வீடுதான் ...
இந்த வீடுக்கு காவலுக்கு என் இவளவு பேர் பார்த்தவுடன் தெரிந்தது இவர்கள் போலீஸ் என்று ..பின்புறம் உள்ள மரத்தின் பின் மறைந்து மறந்து சென்று ...
ஓலை சிறிது பிரித்து எட்டி பார்த்தான்
கெட்டி சுவர்  உள்ளே ...மிகவும் குழம்பி பொய் இருக்கும் பொது இரண்டு காவலாளிகள் பேசி கொண்டே அவன் நிற்கும் இடத்தின் அருகில்
வந்தனர்.
அவர்கள் பேசிகொண்டது
அவனுக்கு அதிர்சிக்கு மேல் அதிர்ச்சி அக இருந்தது ..
..

தொடரும்.....
இது ஒரு சிறுவர் தமிழ் கதை களஞ்சியம் ... புத்தம் புதிய கதைகள் ... நினைவலைகள், கவிதைகள் ,விடுகதைகள் , வாசகர் கடிதம், சிரிப்புகள்  , இன்னும் நிறைய வெளியடப்படும் ... பழைய புகழ்பெற்ற கதைகள் ... அனைத்தும் சிறுவர்களுக்காக...நீங்களும் உங்கள் படைப்புக்களை அனுப்பலாம் ,



                          Under construction  but u can comment and advice now itself



எச்சரிக்கை பார்த்து செல்லவும்  இங்கு கட்டிட வேலை நடந்து கொண்டு உள்ளது 


Recent Comments

Total Pageviews